தைப்பூச ரத ஊர்வலத்தின் போது வாணவேடிக்கை வெடித்து பக்தர்கள் காயமுற்ற சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 25 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என
கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் சைஃபி அப்துல் ஹமிட் கூறினார்.
சுங்கைப்பட்டாணி பெக்கான் லாமாவிலுள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் முன்புறம் ரத ஊர்வலத்தின் தொடக்கமான வாணவேடிக்கை வெடிக்க வைத்தபோது அது கீழாக வெடித்ததில் பொதுமக்கள் காயமடைந்தனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் புலனாய்வு மேற்கொண்டனர். இச்சம்பவத்தின் பின்னணியில் சதிநாச வேலை எதுவும் இல்லை என அவர் கூறினார்.
வாணவேடிக்கை வெடித்ததில் 28 பேர் காயமடைந்த நிலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
No comments:
Post a Comment