Friday, 2 February 2018

போலீஸ் விசாரணையில் உண்மை வெளிகொணரப்படும்- கல்வி துணை அமைச்சர்


சிரம்பான் -
மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் விவகாரத்தில் போலீசார் தங்களின் புலன் விசாரணையை முடித்த பின்னர் உண்மையை வெளிகொணரப்படும். அதுவரை பொதுமக்கள் யாரும் யூகங்களை வெளியிட வேண்டாம் என கல்வி துணை அமைச்சர் டத்தோ சோங் வூன் சின் கேட்டுக் கொண்டார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவியின் விவகாரத்தை போலீசார் புலன் விசாரணை செய்ய அனுமதிப்போம் என கூறிய அவர், ஆசிரியர்கள் 'எஸ்.ஓ.பி.' எனப்படும் நிரந்தர செயல்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பானதாக திகழும் என அவர் சொன்னார்.

ஆசிரியர் ஒருவரின் கைதொலைபேசி காணாமல் போனது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியா தற்கொலைக்கு முயன்ற சூழலில் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

No comments:

Post a Comment