ஜோர்ஜ்டவுன் -
மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் அடிப்படை காரணங்களை கண்டறிய மரண விசாரணை நடத்த வேண்டும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பினாங்கு மாநில போலீஸ் அனுமதி கோரவுள்ளது என மாநில குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் டத்தோ ஸைனோல் சமா தெரிவித்தார்.
14 வயதான வசந்தபிரியாவின் மரணம் தொடர்பிலான புலன் விசாரணையை நாங்கள் மேற்கொண்டு அதன் முடிவை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்பித்து மரண விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.
மரண விசாரணை நடத்தப்படுவதால் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணை, வாக்குமூலங்கள் அனைத்தையும் மரண விசாரணை நடத்தும் அதிகாரிக்கு உதவியாக இருக்கும் என போலீஸ் கருதுவதாக அவர் சொன்னார்.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆயினும் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி நினைவு திரும்பாமலேயே அவர் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment