ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
50 ஆண்டுகள் பழைமையான டோவன்பி கல்லுமலை ஶ்ரீ ஓங்கார காளியம்மன் ஆலய கும்பாபிஷேக நேற்றுக் காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
7 லட்சம் வெள்ளி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியுள்ளதாக ஆலயத் தலைவர் காளிதாஸ் நரசைய்யா தெரிவித்தார்.
சுப்பிரமணியம்- திருமதி இரக்கம்மா ஆகியோர் இவ்வாலயத்தை பின்னர் பலர் பராமரித்து சீர்படுத்தி இன்று மிகப் பெரிய ஆலயமாக திகழும் வகையில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விழாவில் டோவன்பி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் திளைத்தனர்.
No comments:
Post a Comment