செபெராங் பிறை-
மாணவி வசந்தபிரியா விவகாரத்தில் காணாமல் போனதாக கூறப்படும் கைத்தொலைபேசி இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.
உணவுக் கடை ஒன்றில் அந்த கைத்தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வலம் வரும் தகவல்களை மறுத்த தென் செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் ஷாபி அப்துல் சமாட், 'அந்த கைத்தொலைபேசி இன்னமும் கண்டெடுக்கப்படவில்லை' என கூறினார்.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி காணாமல் போனது தொடர்பில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, வீட்டிற்கு வந்ததும் அறையில் நுழைந்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆயினும் அவரை உடனடியாக காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பலனளிக்காமல் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மாணவி வசந்தபிரியா மரணமடைந்தார்.
No comments:
Post a Comment