Tuesday, 20 February 2018

டோல் சாவடியின் தடுப்புச் சுவரை மோதி விபத்து; இருவர் பலி


ஷா ஆலம்-
பத்து தீகா டோல் சாவடி வழிதடத்தை மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம்  இன்று அதிகாலை 12.55 மணியளவில் நிகழ்ந்தது.

தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடி விட்டு வீடு திரும்புகையில் நோர் ஹிடாயா முகமட் ரெஸ்மி (27), அவரின் நண்பர் ஃபதுரெஸ்ஸா கைருல் ஹுடா ஹலிம்சுதோ (31) ஆகியோர் பயணம் செய்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடியின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானது.

'ஃபதுரெஸ்ஸா காரை வேகமாக செலுத்தியதாகவும் அது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என  ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹாருடின்  மாட் தாயிப் தெரிவித்தார்.

இவ்விருவரின் உடல்களும் சவப் பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்விருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41 (1)இன் கீழ் விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பத்து தீகா டோல் சாவடி கட்டண முறை  இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment