Wednesday, 7 February 2018

வகுப்பறையில் கைத்தொலைபேசி பயன்பாடு; ஆசிரியர்களுக்கான தடை நடப்பில் உள்ளது- துணை அமைச்சர்


புத்ராஜெயா-
பள்ளிகளில் கைத்தொலைபேசி பயன்பாடு குறித்து மிக கடுமையான விதிமுறைகள் ஏற்கனவே நடப்பில் உள்ளன. கற்றல், கற்பித்தல்களின்போது வகுப்பறைகளில் அவற்றை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு கட்டுபாடுகள் உள்ளன என்று கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தங்களது கைத்தொலைபேசியை பள்ளிகளுக்கு எடுத்து வரலாம். ஆனால் அவற்றை வகுப்பறைக்குள் கொண்டு வர கட்டுப்பாடுகள் உள்ளன.

மாணவி வசந்தபிரியா விவகாரத்தில்  சம்பந்தப்பட்ட ஆசிரியை வகுப்பறைக்குள் கைத்தொலைபேசியை பயன்படுத்தினாரா என்பது உறுதியா தெரியவில்லை.

இவ்விவகாரம் குறித்த விபரம் தெரியவில்லை. போலீஸ் விசாரணைக்கே விட்டு விடலாம். போலீஸ் விசாரணையில் நடந்து என்ன என்பது தெரியவரும். போலீசாரின் விசாரணை முடிவை பொறுத்தே கல்வி அமைச்சின் நடவடிக்கை முடிவெடுக்கப்படும் என அவர் சொன்னார்.

அண்மையில் நிபோங் தெபால் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த  ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணைக்கு பின்னர் வீட்டுக்கு வந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆயினும் வசந்தபிரியாவை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனளிகாமல் கடந்த 1ஆம் தேதி வசந்தபிரியா மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment