பெட்டாலிங் ஜெயா-
ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎஃப்) கட்டத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு ஜாலான் காசிங் செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங் செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கட்டடத்தில் நண்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அறிவித்துள்ள தீயணைப்புத் துறை, இத்தீயை அணைக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.
கரும்புகை கக்கிய வண்ணம் கொளுந்து விட்டெரியும் தீயினால் கட்டடத்தின் சிதறிய பாகங்கள் சாலையில் விழுவதோடு வாகனத்தைச் செலுத்தும் வாகனமோட்டிகள் இதனை பார்த்துக் கொண்டே செல்வதால் கூட்டரசு நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment