Thursday, 8 February 2018

'திருமண ஆசை நிராகரிப்பு; கொலையில் முடிந்துள்ளது' - போலீஸ்


கோலாலம்பூர்-
37 வயது ஆடவர் முன்மொழிந்த திருமண ஆசையை நிராகரித்ததன் விளைவாக டி.தாரணி கொலை செய்யப்பட்டார் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை தாரணியிடம் வற்புறுத்தி வந்த ஆடவர், அதனை தாரணி நிராகரித்தை ஏற்க முடியாமல் கூர்மையான ஆயுதத்தை கொண்டு  தாக்கியுள்ளார்.

நேற்று முன்தினம் கார் நிறுத்துமிடத்தில் தாரணியை கொன்று, அவரின் உடலுடன் டாமன்சாரா காவல் நிலையத்தில் சரணடைந்த ஆடவனை கைது செய்த போலீசார் ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாரணியும் சம்பந்தப்பட்ட  ஆடவரும் காதலர்கள் கிடையாது என தெளிவுப்படுத்திய முகமட் ஸானி, இவ்விரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருபவர்கள் ஆவர். இவ்விருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலர்களாக இருந்து வந்துள்ளனர் என்ற தகவலில் உண்மையில்லை.

கடந்த நவம்பர் மாதம் தான் இவ்விருவரும் அறிமுகமாகியுள்ளனர். தாரணி பணிபுரிந்து வந்துள்ள ஆடம்பர அடுக்குமாடி கட்டட நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவில் அவ்வாடவர் பணியாற்றி வந்துள்ளார் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment