கோலாலம்பூர்-
மாணவி வசந்தபிரியா கைத்தொலைபேசியை திருடியதாக குற்றஞ்சாட்டிய ஆசிரியை மாவட்ட கல்வி இலாகாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மட்ஸிர் காலிட் தெரிவித்தார்.
மாநில கல்வி இலாகா, அதிகாரிகள் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் தங்களது விசாரணையை முடிக்கும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியை அங்கு பணி புரிவார் என அவர் சொன்னார்.
வசந்தபிரியாவின் மரணத்தினால் துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
ஆசிரியர்களிடையே உளவியல் ஆற்றலை மேம்படுத்துவதற்கான மேம்பாட்டுகள் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துகளை அமைச்சு ஏற்கிறது.
ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி கழகங்கள், பல்கலைக்கழகங்களில் உளவியல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
No comments:
Post a Comment