ஈப்போ-
பள்ளிகளில் 'பள்ளி பாடல்' இசைக்கப்படுவது வழக்கமாக உள்ள ஒன்றுதான். ஆனால் பள்ளி பாடல் கூட காலத்திற்கேற்ற உருமாற்றத்தை அடைந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் கூட மெல்லிசை கீதத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது ஒருகாலம். ஆனால் தற்போதைய திரைப்படப் பாடல்கள் எல்லாம் மேற்கத்திய பாணியில், நாடி நரம்புகளை உற்சாகமடையச் செய்யும் வகையில் உருமாற்றம் கண்டுள்ளன.
'இசை புரட்சி' திரைப்படங்களில் மட்டுமல்லாது தனி பாடல் (சிங்கிள் டிராக்), தமிழ் வாழ்த்து என பலவற்றை கடந்து வந்துள்ள நிலையில் பள்ளிகளில் ஒலிக்கக்கூடிய 'பள்ளி பாடலிலும்' இடம் பெற வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது ஆசிரியை குமாரி தமிழரசியின் முயற்சி.
தனது பள்ளி பாடல் புதிய மெட்டுடன் இனிமையான வரிகளுடன் அமைந்திட வேண்டும் என ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் இவர்.
பேராக், கிரியான், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியை தமிழரசி, 'வாழ்வின் சுடரொளியே' என தொடங்கும் பாடலை உருவாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜெய் இசையில் புதிய மெட்டு, புது வரியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளி பாடல் உருவாக்கம் குறித்து ஆசிரியை தமிழரசியுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பு நாளை 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறும்.
இசையில் மென்மேலும் புதுமையைப் புகுத்தி ஒரு நவீன பரிணாமத்தை உருவாக்க என் வாழ்த்துகள்.
ReplyDelete