கோலாலம்பூர்-
சீனப் பெருநாளை முன்னிட்டு தங்களது ஊர்களுக்கு திரும்புவோர் சாலைகளில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவுறுத்தியுள்ளார்.
"சீனப் பெருநாளை தங்களது ஊர்களில் கொண்டாடி மகிழ பலர் இன்று தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவர் என நம்புகிறேன்.
சாலை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக உங்களது பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது அன்புக்குரியவர்களுடனும் குடும்பத்துடனும் சந்தோஷமாக இந்நாளை கொண்டாடி மகிழுங்கள்.
பெருநாள் காலத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் மெதுவாக பயணத்தை மேற்கொள்ளுங்கள்' என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment