Saturday, 3 February 2018

வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் ஆசிரியருக்கு எதிராக கண்டனக் குரல்


நிபோங் தெபால்-
மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவர் பயின்ற இடைநிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக பலர் கண்டனக் குரல்களை எழுப்பினர்.

வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலம் அவர் பயின்ற நிபோன் தெபால் மெத்தடிஸ்ட்  இடைநிலைப்பள்ளி வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

'எங்களுக்கு நீதி வேண்டும்', சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்க செய்க' என கண்டனக் குரல் எழுப்பியவாறே மாணவி வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

No comments:

Post a Comment