கிரீக்-
சாலையில் வந்து கொண்டிருந்த யானையை விரட்ட முயன்ற இந்திய ஆடவரை யானை மிதித்ததில் அவ்வாடவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கிரீக் பகுதியில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து விவரித்த கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடென்டன்ட் இஸ்மாயில் மாட் இசா, கிரிக் பகுதியை நோக்கி தனது மகனுடன் லோரியில் சென்றுக் கொண்டிருந்த சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த எம்.பரமநாதன் (69) யானை வருவதை கண்டு லோரியை நிறுத்தியுள்ளார்.
யானையை விரட்ட முயன்ற அவ்வாடவரை யானை மிதித்ததில் கை, கழுத்து பகுதி எலும்புகள் முறிந்து படுகாயமுற்றார்.
லோரியில் இருந்த அவரது மகன் அவ்வாடவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளார்.
கிரீக் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்றார் அவர்.
No comments:
Post a Comment