ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் கெளரவப் பொருளாளர் டத்தோஶ்ரீ சா.வேள்பாரி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
மஇகா பாரம்பரிய தொகுதியாகவும் மஇகா தேசியத் தலைவர்களின் கோட்டையாகவும் விளங்கிய இத்தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கிறது.
இந்நிலையில் வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியை மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ள மஇகா- தேமு , பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க எண்ணம் கொண்டுள்ளது.
அவ்வகையில் இத்தொகுதியில் டத்தோஶ்ரீ வேள்பாரியை களமிறக்கினால் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என வியூகம் வகுத்துள்ளதாக அறியப்படுகிறது.
இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துன் ச.சாமிவேலுவின் செல்வாக்கு இன்னமும் இங்கு காணப்படுவதால் அதனை பயன்படுத்தி அவரின் மகனான வேள்பாரியை வெற்றி பெற செய்து விடலாம் என கருதப்படுவதால் அவரையே வேட்பாளராக மஇகாவும் தேசிய முன்னணியும் களமிறக்கலாம் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment