Tuesday, 13 February 2018

'கேமரா பதிவு தெளிவில்லை'; மாணவி வசந்தபிரியா திருடினார் என்ற தகவலை மறுத்தது போலீஸ்


புத்ராஜெயா-
ஆசிரியரின் கைத்தொலைபேசியை மாணவி வசந்தபிரியா திருடியதற்கான சிசிடிவி கேமரா பதிவு இருப்பதை போலீஸ் மறுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த கேமரா பதிவு தெளிவில்லாமல் இருப்பதால் அது யார் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அதனை உறுதி செய்ய தடயவியல் நிபுணர்களின் தேவைபடுவதால் இது குறித்து மேலும் கருத்துரைக்க முடியாது என பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் கூறினார்.

கேமரா பதிவு தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நண்பர்கள் என இதுவரை 30 பேரை போலீஸ் விசாரணைக்கு அழைத்துள்ளது. இப்போது இதை பற்றி யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் அது உறுதிப்படுத்தப்படாது ஆகும்.  இவ்விவகாரம் தொடர்பில் போலீசாரின் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  என்றார் அவர்.

இதற்கு முன்னர் கைத்தொலைபேசியை மாணவி வசந்தபிரியா எடுத்ததாக கூறப்படும் கேமரா பதிவு உள்ளதாக தகவல் வெளியானது. அந்த தகவலில் உண்மை இல்லை என போலீஸ் மறுத்துள்ளது.

No comments:

Post a Comment