Friday, 2 February 2018

மாணவி வசந்தபிரியாவின் நல்லுடக்கு அமைச்சர் சுப்பிரமணியம் இறுதி அஞ்சலி


நிபோங் தெபால்-
சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் நல்லுடலுக்கு மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆசிரியரின் கைதொலைபேசி களவு போனது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தபிரியா இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணச் செய்தி மலேசியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்  நிபோங் தெபாலிலுள்ள  இல்லத்தில் வசந்தபிரியாவின் நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாணவியின் வீட்டிற்குச் சென்ற டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், வசந்தபிரியாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
'இச்சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சம்பவம் இனிமேலும் நிகழக்கூடாது' என தனது இரங்கல் செய்தியில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment