Wednesday, 21 February 2018

மஇகா: 60% புதிய முகங்கள் வேட்பாளராக களமிறக்கப்படுவர் - டத்தோஶ்ரீ சுப்ரா


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 விழுக்காடு புதிய முகங்கள் வேட்பாளராக களமிறக்கப்படுவர் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்த புதிய முகங்களை உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புதிய வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அதில் 60 விழுக்காட்டினர் புதிய முகங்கள் எனவும் 40 விழுக்காட்டினர் பழைய முகங்கள் அடங்குவர் எனவும் நேற்று  மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின்போது தெரிவித்தார்.

மேலும் தொகுதி பரிமாற்றம் குறித்து இதுவரை தேமு பங்காளி கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. தற்போது வரை மஇகா தொகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment