Friday, 23 February 2018
மலைப் பாதையிலிருந்து கவிழ்ந்தது பேருந்து; 44 பேர் பலி
லீமா-
பயணிகளை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று மலைப் பாதையிலிருந்து தென் பெருவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
மலைப்பகுதியிலிருந்து 80 மீட்டர் பள்ளத்தில் (260 அடி) இந்த பேருந்து கவிழ்ந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், தீயணைப்பு, மீட்புப் படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமானா சிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 11 பேர் ராணுவ ஹெலிகாப்டரின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
இதற்கு முன்னர் 35 பேர் மரணமடைந்தனர் என உள்துறை அமைச்சகம் டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அரேகியுபா போலீஸ் தலைவர் ஜெனரல் வால்டர் ஒர்டிஸ் 44 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment