ஷா ஆலம்-
நேஷனல் ஃபிட்லோட் கார்ப்பரேஷன் (என்எஃப்சி) தொடர்பான வங்கி கணக்கறிக்கையை வெளியிட்ட குற்றத்திற்காக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு 30 மாதச் சிறைத் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேசிய கால்நடை பண்ணை உரிமையாளரான முகமட் சாலே இஸ்மாயில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்கியது தொடர்பில் ரபிசி கணக்கறிக்கைகளை வெளியிட்டார்.
கால்நடை பண்ணையை மேம்படுத்துவதற்காக 200,000 வெள்ளி வங்கிக் கடன் பெற்றதாகவும் அந்த பணத்தில் முகமட் சாலே ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்கினார் எனவும் ரபிசி குற்றஞ்சாட்டினார்.
வங்கி, நிதி நிறுவனங்களின் சட்டத்தை மீறியதற்காக ரபிசி ரம்லிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தின் அடிப்படையில் ரபிசிக்கும் பப்ளிக் வங்கு ஒன்றின் முன்னாள் ஊழியருக்கும் 30 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரபிசி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து தற்காப்பு வாதம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment