Tuesday, 6 February 2018

14ஆவதுபொதுத் தேர்தலில் இந்திய சமுதாயத்தின் பங்கு அளப்பரியது- துன் மகாதீர்


கிள்ளான் -
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு இந்தியர்களின்  பங்கு மிக முக்கியமானதாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறினார்.

மூன்று முக்கிய சமுதாயத்தினர் உள்ள இந்நாட்டின் இந்நிய சமூகத்தினர் மிகச் சிறய சமுதாயமாக இருந்தாலும் வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாக கருதப்படுகிறது என இங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

'தாம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றால் இந்திய சமுதாயத்தின் தேவைகள் மீது தனி கவனம் செலுத்துவேன்'  என கூறிய அவர், இது எனது வாக்குறுதி, நீங்களை எங்களை ஆதரிப்பீர்கள், எனவே நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்' என பக்காத்தான் ஹராப்பான் பிரமர் வேட்பாளருமான துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment