Monday 19 February 2018

நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தல்- துணைப் பிரதமர்


தெலுக் இந்தான் -
நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவே நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார்.

'நமக்கு மூன்று 'ராயா'க்கள் (பெருநாள்) உள்ளன. சீனப் பெருநாள் முடிந்து விட்டது. அடுத்ததாக நோன்புப் பெருநாள், ஆனால் நாம் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு முன்னதாக மிகப் பெரிய 'ராயா' கொண்டாட்டம் உள்ளது என இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

அவர் மிகப் பெரிய ராயா என குறிப்பிடுவது '14ஆவது பொதுத் தேர்தல் (பிலிஹான் ராயா)  கருதப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனப் பெருநாளுக்கு பின்னர் பொதுத் தேர்தல்  நடத்தப்படலாம் என அவர் கூறியிருந்தார்.

நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் வரும் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகின்ற நிலையில் அத்தேதிக்கு பிந்திய 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment