புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பிப்ரவரி 14. நாளை விடிந்தால் அனைவரும் கொண்டாடி மகிழக்கூடிய நாள் 'அன்பர்கள் தினம்' . இந்த அன்பர்கள் நாளில் அனைவரின் கரங்களில் இருக்கக்கூடியது ரோஜா பூக்கள் தான்.
இந்த அன்பர்கள் நாளில் அன்பை பரிமாறி கொள்ளவும், அன்பை வெளிபடுத்தவும் சிறந்த பொருள் ரோஜா பூக்கள் தான். எவ்வளவுதான் விலையுயர்ந்த பொருட்களை அன்புக்குரியவருக்கு கொடுத்தாலும் ஒற்றை ரோஜா பூவை கொடுப்பதில் வெளிபடும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவ்வகையில் இன்று தொடங்கி ரோஜா பூக்களை விற்பனை செய்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரிய பேரங்காடிகளில் மட்டுமல்லாது சிறிய அளவில் கூடாரங்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஈப்போவில் ரோஜா பூக்களை விற்பனை செய்து வரும் சிலரை 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் சந்தித்தபோது அவர்கள் கூறிய கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.
ஷாலினியின் கூடாரத்தில் ரோஜா பூக்களை வாங்கி மகிழும் யுகேன். |
- ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் சில்வர் டவுன் கடை நடத்தி வரும் ஷாலின், தனது கடை அருகில் அன்பர்கள் தின பரிசுப் பொருட்களையும் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை விற்பனை செய்து வருவதாக கூறினார்.
ரோஜா, பூச்செண்டுகளை விற்பனை செய்யும் தர்ஷினி, அவருக்கு உதவும் யாஸ்னி. |
- வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான வடிவங்களில் ரோஜா பூச்செண்டு, பரிசுகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருவதாக செல்வி தர்ஷினி கூறுகிறார். இன்று தொடங்கி நாளை வரை ரோஜா பூக்கள விற்பனை செய்து வருகிறேன். மேலும் ஆன் லைன் மூலமாக பலர் பூக்களை ஆர்டர் செய்து வருவதாக குறிப்பிடும் அவர், தமக்கு உதவியாக யாஷ்னி இருக்கிறார் என்றார்.
பூச்செண்டு, ரோஜா பூக்களுடன் அப்பு, அவரது மகள் ரேணுகா. |
- கடந்த 18 வருடங்களாக புந்தோங் பகுதியில் அன்பர்கள் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களையும் பரிசுப் பொருட்களையும் விற்பனை செய்வதாக அப்பு, அவரது மகள் ரேணுகா ஆகியோர் தெரிவித்தனர். அன்று தொடங்கி இன்று வரை ரோஜா பூக்களை 5.00 வெள்ளிக்கு விற்பனை செய்து வருவதாக குறிப்பிடும் இவர், சீன வாடிக்கையாளர்களிடம் சீன மொழி பேசி பூக்களை விற்பனை செய்வதே தனி அழகுதான்.
ரோஜா மலர்கள், பரிசுப் பொருட்களுடன் வெரோனிக்கா, கிரேஸ் ஆகியோர். |
- கடந்த 15 ஆண்டுகளாக அன்பர்கள் தினத்தில் கூடாரம் அமைத்து ரோஜா பூக்களையும் பரிசுப் பொருட்களையும் பூச்செண்டுகளையும் விற்பனை செய்து வருவதாக கூறும் வெரோனிக்கா, கிரேஸ் ஆகியோர், ஒரு ரோஜாவை 10.00 வெள்ளிக்கு விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டனர்.
பூச்செண்டு, பரிசுப் பொருட்களுடன் பூபாலன். |
- கடந்த 15 ஆண்டுகளாக காதலின் சின்னமான 'தாஜ்மகால், ரோஜா பூக்களை விற்பனை செய்து வருவதாக குறிப்பிடும் பூபாலன் சுப்பிரமணியம், பல வடிவங்களில் பூச்செண்டுகளையும் பரிசுப் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment