Saturday, 3 February 2018
ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தல்- கோடிகாட்டினார் நஜிப்
புத்ராஜெயா-
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமிய சமய போதகர்கள், கிராம, சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு 'இரண்டு "ராயாக்கள்" முடிந்த பின்னரே நீங்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வீர்கள்' என பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளது ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
ஜூலை 14ஆம் தேதி ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் 1,200 பேருக்கு சலுகை கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் நஜிப்பின் உரை 14ஆவது பொதுத் தேர்தலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஹரிராயா பெருநாளையும் மலாய்மொழியில் 'பிலிஹான்ராயா' (Pilihanraya) என பொதுத் தேர்தலையும் குறிப்பிட்டுதான் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார் என பலருக்கு தெளிவாக விளங்கியது.
இவ்வாண்டு ஜூன் 24ஆம் தேதியுடன் தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு கால தவணை முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment