Thursday, 8 February 2018
வசந்தபிரியா மரணம்; 'அந்த 1 மணி நேரம் நடந்தது என்ன?'- டேவிட் மார்ஷல் கேள்வி
நிபோங் தெபால்-
கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியாவு '1 மணி நேரத்தில் நிகழ்ந்தது என்ன? என்பது விசாரிக்கப்பட வேண்டும் என மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் வலியுறுத்தினார்.
மாணவி வசந்தபிரியா தற்கொலைக்கு முயன்ற கடந்த ஜனவரி 24ஆம் தேதி பள்ளி முடிந்தது மாலை 6.40 மணி என முன்பு நினைத்திருந்தோம். ஆனால் அந்த நாளில் பள்ளிக்கூடம் 5.55 மணியளவி முடிந்துள்ளது. ஆனால் வசந்தபிரியா 6.55 மணியளவிலேயே வீட்டில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்.
'அந்த ஒரு மணிநேரத்தில் என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஒரு மணி நேரத்தில் நடந்த சம்பவமே அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியிருக்கலாம் என கருதுகிறோம்.
ஆதலால் பள்ளியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கி விட்ட ஆசிரியை, அவரது கணவர் மீதான விசாரணையை போலீஸ் துரிதப்படுத்த வேண்டும் என்று வசந்தபிரியா விவகாரம் தொடர்பில் டேவிட் மார்ஷல் கூடுதல் விவரங்களை வழங்கியபோது வலியுறுத்தினார்.
கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவை 5 மனி நேரம் தனி அறையில் அடைத்து வைத்து உணவு அருந்தவும் கழிவறைக்கு செல்லவும் சம்பந்தப்பட்ட ஆசிரியை அனுமதிக்காமல் விசாரணை மேற்கொண்டதோடு பள்ளி முடிந்து தனது காரில் ஏற்றிச் சென்று வீட்டில் இறக்கி விட்டுள்ளனர்.
வீட்டிற்கு வந்த வசந்தபிரியா தற்கொலை முயற்சியை மேற்கொண்ட நிலையில் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி இச்சிறுமி மரணமடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment