Saturday, 10 February 2018

1 நாடாளுமன்றம், 3 சட்டமன்றத் தொகுதிகள்; மஇகா மகளிர் பிரிவு கோரிக்கை


ரா.தங்கமணி

ஊத்தான் மெலிந்தாங்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகளிருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட  வேண்டும் என மஇகா தேசியத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளாக மஇகா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி கூறினார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதன் அடிப்படையில் மகளிருக்கு இத்தேர்தலில் கூடுதல் வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறிய டத்தோ மோகனா, மகளிருக்கு வழங்கப்படும் தொகுதிகளில் நிச்சயம் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள போராடுவோம் என்றார்.

மேலும், வேட்பாளராக களமிறங்கும் மகளிர் யார்? என்பதை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தான் முடிவு செய்வார்.

யாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் முழுமையான ஆதரவை மஇகா மகளிர் பிரிவு வழங்கும் என தெரிவித்த அவர், மகளிர் பிரிவின் மீது நன்மதிப்பை கொண்டுள்ள கட்சித் தலைவர் நிச்சயம் நல்லதொரு முடிவைதான் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment