ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நம்பிக்கைக் கூட்டணியை (பக்காத்தான் ஹராப்பான்) தேசிய பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) அங்கீகரிக்க வேண்டும் என ஜசெகவின் துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.
கூட்டணியை முறையாக பதிவு செய்வது உட்பட எதிர்க்கட்சி உடன்படிக்கைக்கு முன்னால் பல்வேறு சவால்கள் உள்ளன.
பக்காத்தான் பதிவை ஆர்ஓஎஸ் சீக்கிரமே அங்கீகரிக்க வேண்டும் என நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் இன்று வரை எவ்வித பதிலும் இல்லை என இக்கூட்டணியில் மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment