ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டோவன்பி தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் தினத்தன்று ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டதோடு பல்வேறு போட்டி விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
கோலப்போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, உறி அடித்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆலயம் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் மக்களிடம் அணுக்கமான உறவை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் என ஆலயத் தலைவர் மு.மனோகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇமா தொகுதிச் செயலாளர் கி.மணிமாறன், கம்போங் ராமசாமி தலைவர் சுப்பிரமணியம், ஆலயப் பொறுப்பாளர்கள், குடியிருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment