Saturday, 20 January 2018

மீண்டும் 'விழுந்தது' நாற்காலி; நூலிழையில் தப்பினார் ஊழியர்


கோலாலம்பூர்-
மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாற்காலி 15 வயது சிறுவனின் தலையில் விழுந்து மரணத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவத்தின் சர்ச்சை அடங்குவதற்கு மீண்டும் நாற்காலி பறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜாலான் பங்சாபுரியிலுள்ள புத்ரா ரியா அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.  கீழேயுள்ள புட்சால் அரங்கில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு மிக அருகில் அந்த இரும்பு நாற்காலி விழுந்துள்ளது.

'தனக்கு மிக அருகில் நாற்காலி வந்து விழுந்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 10ஆவது அல்லது 12ஆவது மாடியிலிருந்து விழுந்திருக்கக்கூடும்' என அஸ்மி என அடையாளப்படுத்திக் கொண்ட அந்த ஊழியர் கூறினார்.

இந்த நாற்காலி என் தலையில் விழுந்திருந்தால் இந்நேரம் என் நிலை என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்தகூட பார்க்க முடியவில்லை. இன்னமும் நான் உயிருடன் இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன்' என்றார் அவர்.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை ஶ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி சிறுவன் சதீஸ்வரனின் தலையில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment