Tuesday, 9 January 2018

ஆம்புலன்ஸுக்கு வழிவிட முயன்ற டிரெய்லர் லோரி மேம்பாலத்திலிருந்து விழுந்தது


தெமர்லோ-
ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கிய டிரெய்லர் லோரி மேம்பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் கோலாலம்பூர்- குவாந்தான் சாலையின் 125ஆவது கிலோமீட்டரில் உள்ள அஹ்மாட் ஷா மேம்பாலத்தில் நிகழ்ந்தது.

13 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த டிரெய்லர் லோரியின் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் பரிசோதனைக்காக  சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் நிறுத்த முயன்றபோது பிரேக் பிடிக்க முயன்றும் இயலாததால் வேக கட்டுப்பாட்டை இழந்து இரும்பு கம்பியை மோதி லோரி பாலத்திலிருந்து கீழே விழுந்ததாக அதன் ஓட்டுனர் முகமட் ஃபாரிஸ் தெரிவித்தார்.

இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 42இன் கீழ் விசாரிக்கப்படுவதாக தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஸுண்டின் மாமுட் கூறினார்.

No comments:

Post a Comment