ஈப்போ-
ஓர் அரசியல் கட்சியாக பதிவு பெற்றுள்ள பிஎஸ்எம் கட்சி வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும். 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிஎஸ்எம் கட்சி வேட்பாளர்கள் களமிறங்குவர் என அதன் தேசிய துணைத் தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.
சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிடுவார் எனவும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார் என சிலர் வதந்தி பரப்பிவிடுகின்றனர்.
பிஎஸ்எம் கட்சியின் சின்னத்திலேயே இதன் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்ற அவர், கடந்த தேர்தலில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிகேஆர் சின்னத்தின் போட்டியிட நேர்ந்தது எனவும் அவர் சொன்னார்.
இதனிடையே, சுங்கை சிப்புட்டில் டாக்ட்ர ஜெயகுமாரும் பத்துகாஜாவில் வழக்கறிஞர் குணசேகரனும், ஜெலாப்பாங்கில் சரஸ்வதியும் புந்தோங்கில் மோகனராணியும் மாலிம் நாவாரில் வழக்கறிஞர் பவானியும் போட்டியிடவுள்ளனர் என குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment