Thursday, 18 January 2018

நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: குற்றவாளியை கைது செய்து தண்டியுங்கள் - தந்தை வேண்டுகோள்


கோலாலம்பூர்-
நாற்காலியை வீசி தனது மகனை கொன்ற குற்றவாளியை போலீசார் கைது செய்து தண்டிக்க வேண்டும் என நேற்று முன்தினம் மரணமடைந்த சிறுவன் சத்தீஸ்வரனினி தந்தை சத்தியசீலன் கேட்டுக் கொண்டார்.

பந்தாய் டாலாம், ஶ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் 16ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி 15 வயது சிறுவன் சத்தீஸ்வரன் தலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.

21 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என டாமன்சாராவில் பாதுகாவலராக பணியாற்றும் சத்தியசீலன் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய சத்தீஸ்வரனின் தாயார் திருமதி கஸ்தூரிபாய், எனது அண்ணனைச் சந்தித்து விட்டு  வீட்டுக்கு வந்த மகனிடன், அருகிலுள்ள மளிகைக் கடையில் பிரிபெய்ட் கார்டு வாங்கி வரச் சொன்னேன்.

கடைக்குச் சென்று வந்த மகன் பிரிபெய்ட் கார்டு இல்லை என சொன்ன சில நொடிகளில் அவனது தலையில் நாற்காலி வந்து விழுந்தது என கூறிய அவர், இதனை கண்ட நிமிடம் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறினார்.

இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் எஸ்ஏசி ருஸ்டி முகமட் இசா, சந்தேக நபரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது எனவும் அலட்சியத்தால் மரணம் விளைவித்த குற்றத்தின் பேரில் செக்‌ஷன் 304 குற்றவியல் பிரிவின் கீழ் இவ்விவகாரம் விசாரிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment