Sunday, 14 January 2018

ஆஸ்ட்ரோ வானவிலில் இன்று இந்திய தேசிய இராணுவ ஆவணப்படம்


 இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவப் படையின் சிறப்பு நேர்காணல் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் இன்று ஒளியேறவுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து சென்றவர்களும் தன்னார்வலப் படைவீரர்களும் இந்திய தேசிய இராணுவ படையில் இடம் பெற்றனர்.

1940-ஆம் ஆண்டுகளில் நேதாஜி அப்போது மலேசியாவுக்கு வருகை தந்து, மலேசியர்களுக்கு அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு சுதந்திர வேட்கையையும், விழிப்புணர்வையும் தூண்டியவர் என்பதோடு, அவரது தலைமைத்துவ ஆற்றலால் பல இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராட முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் மலேசியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று 13-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவிலில் ஒளியேறும்  இந்திய தேசிய இராணுவ ஆவணப்படத்தில் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ  நீலம், டாக்டர் எல். கிருஷ்ணன், டான்ஸ்ரீ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம், மற்றும் பலரின் சிறப்பு நேர்காணல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

No comments:

Post a Comment