'என்னை அறிந்தால்' படத்தில் விக்டராக நடித்து புகழ்பெற்ற அருண்விஜய், 'குற்றம் 23' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது 'தடம்' படத்தில் நடத்து வருகிறார்.
ரொமாண்டிக் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். எழில், கவின் என இரட்டை வேடங்களை ஏற்று நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக '2015 கொல்கத்தா FBB FEMINA மிஸ் இந்தியா'வாக தேர்வு பெற்ற தன்யா ஹாப் நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகம் ஸ்மிரிதி, வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கின்றனர்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதத்திற்கும் மேல் முடிந்து விட்டதாம். இப்போது மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment