Tuesday, 9 January 2018

'மெரினா புரட்சி' பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை-
ஜல்லிக்கட்டு விளையாட்டை காக்க மாணவர், இளையோர் சமுதாயம் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று போராட்டத்தை உள்ளடக்கிய 'மெரினா  புரட்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

பசங்க புரொடக்‌ஷன் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் எழுத்து- இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

'கலாச்சாரத்தை காப்பாற்ற ஒரு போராட்டம்' என குறிப்பிடப்பட்டுள்ள 'இந்த படத்தின் குழுவினருக்கு தனது வாழ்த்துகள்' என நடிகர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

'பண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர்
தொடங்கிய நாள் இன்று !
கலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...
உங்கள் பார்வைக்கு !
முதல் பார்வை இன்று முதல்..
எங்கள் வாழ்க்கையை மாற்றியதும் #மெரினாதான்' என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சதீஸ்.

No comments:

Post a Comment