கோலாலம்பூர்-
இன்று பிற்பகலில் பெய்த கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பத்துமலை வளாகத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் சரிந்தன.
வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை வளாகத்தில் கடைகளுக்கான கூடாரங்கள் போடப்பட்டிருந்தன.
கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்ததால் கூடாரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கு பதற்றம் நிலவியதோடு கடைகாரர்களும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதோடு பல்வேறான விமர்சனங்களையும் பலர் முன்வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment