Sunday, 14 January 2018

'பொங்கல்'- புதிய விடியல் மலரட்டும்; டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்


கோலாலம்பூர்-

'தைப் பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழி வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கின்றது. செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே நாட்டு மக்கள் அனைவரது இடர்களும் நீங்கி நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையும் நன்றியும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாகவும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களுக்காக பொங்கல் திருநாள் மட்டுமல்லாது மகர சங்கராந்தி பெருநாளை தெலுங்கு வம்சாவளி அன்பர்கள்  கொண்டாடுகின்றனர். மொழியால் வேறுபட்டிருந்தாலும் மதத்தால் நாம் அனைவரும் ஒன்றே என்பதை நினைவுறுத்து பொங்கல் விழாவை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்வோம்.

பொங்கல் முதல் நாளான போகி பண்டிகையின்போது பொருட்களை எரிப்பது மட்டுமல்லாது காலத்திற்கு ஒவ்வாத, வளர்ச்சிக்கு பயன்படாத எண்ணங்களை தவிர்த்து புதிய சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்.

அனைவரின் வாழ்விலும் புது விடியம் மலர்வதாக எண்ணி பொங்கல் திருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்வோம் என சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment