சுங்கைப்பட்டாணி-
ஒரு சிறுமியை மடியில் அமரவைத்து காமச் சேட்டையில் ஈடுபட்ட காமுகனுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அவனை வளைத்து பிடித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு தாமான் ரியாவில் நடந்த கேளிக்கைச் சந்தை நிகழ்ச்சியின்போது அந்த சிறுமியை மடியில் அமர வைத்து காமச் சேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதை பதிவு செய்த ஆடவர் முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரிடமிருந்து புகாரை பெற்ற போலீசார் 40 வயதுடைய ஆடவனை கைது செய்தனர். அவ்வாடவன் சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய என தெரிய வந்துள்ளது.
அவ்வாடவனை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக நாளை காலை நீதிமன்ற அனுமதியை தாங்கள் பெறவிருப்பதாக கோலமூடா போலீஸ் படைத் தலைவர் சாய்ஃபி அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment