சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வெற்றி கொள்ள முடியும் எனவும் இங்கு அதற்கான 'சமிஞ்சை' காணப்படுகிறது எனவும் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.
கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் இத்தொகுதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் மீது 'அதிருப்தி அலை' வீசுகிறது.
வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவக்கூடிய சூழல் உள்ளதாலும் கடந்த கால தவற்றுக்கான பலனை மக்கள் வெகுவாக எதிர்கொள்கின்றனர் என்ற காரணத்தினாலும் தேசிய முன்னணிக்கு சாதகமாக சூழல் தற்போது நிலவுகிறது.
தேசிய முன்னணியின் வெற்றியை தக்கவைப்பதற்காக தொகுதி மஇகா ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், எதிர்க்கட்சியிடம் காணப்படும் பலவீனத்தை மக்கள் கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment