முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை தொடர்பில் நீதிமன்றத்தின் எத்தகைய முடிவையும் அரசாங்கம் மதிக்கும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.
ஜூன் 11இல் அன்வார் இப்ராஹிம் விடுதலை செய்யப்படுவார் என அவரின் மனைவியு பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டத்தோஶ்ரீ ஸாயிட், 'அது எதிர்பார்க்கப்படும் தேதிதான், ஆனால் அதற்கு முன்பே 'பெரிய நாள்' நடந்து விடும். ஆயினும் அன்வார் நாட்டில் உடனடியாக எந்தவொரு பெரிய பதவிகளையும் ஏற்க முடியாது' என்றார்.
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைத்தான் டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment