Wednesday, 24 January 2018
இந்திய தம்பதியர் மாயம்; உறவினர் போலீசில் புகார்
காஜாங்-
தங்களது உணவுக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இந்திய தம்பதியர் காணாமல் போனது குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
கடந்த சனிக்கிழமை ஜாலான் தாமிங் 1இல் உள்ள உணவு கடையை மூடிவிட்டு ரவாங்கிலுள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இந்திய தம்பதியரான வி.மோகன் (36), திருமதி பி.வின்ஷினி (28) ஆகியோர் இன்று வரை வீடு திரும்பவில்லை என வின்ஷினியின் சகோதரி பி.கெளரி தெரிவித்தார்.
'சம்பவத்தன்று பலமுறை அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. அவர்களின் கைப்பேசி இறுதியாக பேராக், கிரீக் பகுதியில் இயங்கியது என காஜாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
மேலும், இத்தம்பதியர் மிரட்டல் அழைப்புகளை பெற்றிருந்தனர் எனவும் அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் என்று கெளரி தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய தம்பதியர் காணாமல் போனது குறித்து புகார் பெற்றுள்ளதாகவும் விசாரணை அறிக்கை தொடங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஹ்மாட் டிஸாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
காணாமல் போன இந்திய தம்பதியருக்கு 10 வயது, 6 வயது பிள்ளைகள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment