Wednesday, 31 January 2018

பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு முயற்சியில் நடமாடும் கழிவறை அமைக்கப்பட்டன


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தைப்பூச விழாவை முன்னிட்டு முருகன் திருத்தலங்களுக்கு வழிபட வரும் பக்தர்களின் வசதிக்காக பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் ஈப்போ வட்டாரத்தில் நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் உபாதைகளை கழிக்க  இன்னல்களை எதிர்நோக்கக்கூடாது எனும் நோக்கில் 4ஆவது ஆண்டாக நடமாடும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என புந்தோங் மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

மைபிபிபி இளைஞர் பிரிவு நாடு தழுவிய நிலையில் இதுபோன்ற கழிப்பறை வசதியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு ஈப்போ கல்லுமலை ஆலயம் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில்  30 நடமாடும் கழிவறைகளை அமைத்துள்ளனர் என அவர் சொன்னார்.

இதனிடையே, பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதோடு அவர்களின் சேவை தொடரப்பட வேண்டும் எனவும் பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நோர் ஃபட்சில், அவர்தம் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக ஆலயத் தலைவர் ஆர்.வி.சுப்பையா தெரிவித்தார்.

No comments:

Post a Comment