Tuesday, 23 January 2018

இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும்- நடிகர் கமல்


சென்னை-
தீவிர அரசியலில் கால் பதிக்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 21ஆம் தேதி  ராமேஸ்வரத்தில் கட்சி பெயரை அறிவித்து, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன்  அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட கமல், இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். அப்போது எனக்கு பல சகோதர்கள் கிடைப்பார்கள் என்று கூறினார்.

அதோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இங்கு சரியாக இல்லை. அதை டிஜிட்டல் முறையில் சரி செய்யவே வந்துள்ளேன். என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என்று கமல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment