Thursday, 25 January 2018

குனோங் சிரோ சுப்பிரமணியர் ஆலய சாலை சீரமைப்பு; உதவியர்களுக்கு நன்றி - டத்தோ நரான் சிங்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
குனோங் சிரோ ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் முறையற்ற சாலை வசதியினால் தைப்பூச கொண்டாட்டத்திற்கு காவடி ஏந்தும் பக்தர்கள் பெரும் வேதனைக்குள்ளாகியிருந்தனர்.

இவ்வாலயத்தின் சாலை சீரமைக்கப்பட வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், ஈப்போ மாநகர் மன்ற மேயரின் செயலாளர் ஸுரியானா,  ஈப்போ பாரார் அம்னோ தலைவர் டத்தோ சம்சுடின் ஆகியயோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில் 24 மணி நேரத்தில் இச்சாலை சீரமைப்பு செய்யப்பட்டது.

இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான தைப்பூச நாளில் காவடி ஏந்தும் பக்தர்கள் எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்புக்கு உதவி புரிந்த டத்தோஶ்ரீ ஸம்ரி, ஸுரியானா, டத்தோ சம்சுடின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment