ஈப்போ-
ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்ட்டு தற்போது முன்னாள் கணவர் வசமுள்ள தனது மூன்றாவது மகள் பிரசன்னா டிக்ஷா தன்னிடம் வந்து சேர வேண்டும் என முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்திருப்பதாக பாலர்பள்ளி ஆசிரியையான திருமதி இந்திரா காந்தி தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக தனது மூன்று பிள்ளைகளின் ஒருதலைபட்ச மதமாற்றத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய திருமதி இந்திரா காந்திக்கு, கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெற்றியை தேடி தந்துள்ளது.
'தன்னுடைய பிரார்த்தனை முழுமையாக ஈடேறாவிட்டாலும் தைப்பூச நாளில் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்ய பால்குடம் ஏந்தி வந்துள்ளதாக' ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வந்த அவர் தெரிவித்தார்.
திருமதி இந்திரா காந்தியுடன் அவரின் மகள் தேவதர்ஷினி, தாயார் ரெங்கம்மா ஆகியோரும் உடன் வந்தனர்.
No comments:
Post a Comment