தைப்பிங்-
லோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இன்று காலை 7.15 மணியளவில் துரோங், கம்போங் சாலாக் பாரு எனுமிடத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் பாதுகாவலரான முகமட் அமின் ஹஷிம் (வயது 70) உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களில் மரணமடைந்தார். இதில் 31 வயதான லோரி ஓட்டுனருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
மரணமடைந்தவரின் சடலம் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில் சம்பந்தப்பட்ட லோரி தைப்பிங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment