Thursday, 18 January 2018

களை கட்டியது பொங்கல்; குதூகலத்துடன் மக்கள் கொண்டாட்டம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தைப்பொங்கல் நன்னாளை முன்னிட்டு இந்தியர்களிடையே பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. விடுமுறை நாளை முன்னிட்டு இவ்வாண்டு பொங்கல் நாளை மிக சிறப்பாகவும்  குடும்ப உறுப்பினர்களுடனும் பலர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுங்கை சிப்புட் வட்டாரத்தில் பல்வேறு கோயில் திருத்தலங்களில் பொங்கல் கொண்டாட்டத்தோடு கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன. சுங்கை சிப்புட் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் காலை வேளையில் தங்கள் வீட்டின் முன்பு பொங்கல் வைத்தனர். கம்போங் முஹிபாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜட்டலையா தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். எப்போதும் வேலை நாட்களில் பொங்கல் வருவதால் பிற மாநிலங்களில் இருக்கும் பிள்ளைகள், வர முடியாததால் இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாடப்பட்டதால் வெளியில் இருந்த பிள்ளைகளும் வருகை தந்தனர் என்றார்.

அதேபோல்  தங்கராஜு என்பவரும் தனது குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இம்மாத தொடக்கம் முதலே மழைக்காலம் இருந்ததால் பொங்கல் தினத்தன்று மழை வந்திடுமோ? என்ற அச்சத்துடன் இருந்தோம். ஆனால் மழை இல்லாமல் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தோம் என  அவர் கூறினார்.

No comments:

Post a Comment