கோலாலம்பூர்-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதுபோல் இந்தியர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கிட வேண்டும். பல்வேறு தடைகளை தாண்டி, நாட்டில் அமைதியும் சுபிட்சமும் நிலவதோடு நவீனத்துவமும் உருவாக வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.
நாளை கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக இல்லாமல் மலேசியர்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்கிட வேண்டும்.
2009ஆம் ஆண்டு முதல் நாட்டில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டதன் வழி அரை மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டங்களின் வழி இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் தொடர்ந்து காக்கப்படும்.
'நாளை நமதே' என கூறுவதுபோல் வருங்காலம் நம்முடையது என நம்புவோம். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் 'பொங்கல் வாழ்த்துகளை' கூறி கொள்வதாக டத்தோஸ்ரீ நஜீப் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment