கோலாலம்பூர்-
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு பிறகு 7ஆவது படை வீடாக கருதப்படும் பத்துமலை திருத்தல தைப்பூச விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
சமய தலமாக மட்டுமின்றி சுற்றுலா தலமாகவும் கருதப்படும் பத்துமலை தைப்பூச விழாவில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கலந்து கொண்டார்.
துணைப் பிரதமருக்கு ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர், நடராஜா ஆளுயர மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பத்துமலை திருத்தலத்தை உலகின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மேம்படுத்தவதற்கான உறுதிபாட்டை இந்த தைப்பூச விழா காட்டுகிறது என டத்தோஶ்ரீ ஸாயிட் தெரிவித்தார்.
மேலும், இங்கு கலாச்சார மையம் உருவாக்க 25 மில்லியன் வெள்ளி தேவைபடும் சூழலில் இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என அவர் சொன்னார்.
இந்த தைப்பூச விழாவில் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசிய துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி உட்பட உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகை புரிந்தனர்.
No comments:
Post a Comment