Sunday, 14 January 2018

வந்தது பொங்கல்; மலரட்டும் புது அத்தியாயம் - இளங்கோவன் முத்து


சுங்கை சிப்புட்-
'தைப்பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள்.  அதுபோல இன்று பிறந்திடும் தை முதல் நாள் அனைவரின் வாழ்விலும் புதிய அத்தியாயத்தைக்  கொண்டு வர வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

உழவர்களின் பெருமையை உணர்த்துகின்ற இப்பொங்கல் திருநாள் இந்நாட்டிலுள்ள இந்தியர்களிடையே ஒற்றுமை மேலோங்குவதற்கும் வாழ்வில் மேம்பாடு காண்பதற்கும் அடித்தளமாக அமைந்திட வேண்டும்.

நமது சமுதாயம் இன்னும் பல வெற்றிகளை கண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருவாக 'பொங்கும் மங்களம் எங்கும் தங்குக' என்பதுபோல் அனைவரின் வாழ்விலும் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment